/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
/
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ADDED : ஆக 20, 2025 10:03 PM

புதுடில்லி: இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடர்கிறார்.
பீஹாரின் ராஜ்கிர் நகரில், வரும் ஆக. 29ல் ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், வரும் செப். 7ல் நடக்கவுள்ளது. இந்திய அணி 'ஏ' பிரிவில் சீனா (ஆக. 29), ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப். 1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் ராஜிந்தர் சிங், ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங், தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். தமிழகத்தின் செல்வம் கார்த்தி, மாற்று வீரராக தேர்வானார்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), கிருஷ்ணன் பதக் (கோல் கீப்பர்), சூரஜ் கர்கேரா (கோல் கீப்பர்), சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங், ராஜிந்தர் சிங், ராஜ் குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.
மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப், செல்வம் கார்த்தி

