/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்: பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் தங்கம்
/
வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்: பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் தங்கம்
வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்: பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் தங்கம்
வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்: பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் தங்கம்
UPDATED : செப் 05, 2024 09:58 PM
ADDED : செப் 05, 2024 01:20 AM

பாரிஸ்: பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், போலந்தின் லுாகாஸ் சிசெக் மோதினர். அபாரமாக ஆடிய ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் பாராலிம்பிக், ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இது, பாராலிம்பிக்கில் இவரது 2வது பதக்கம் ஆனது. ஏற்கனவே டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) வெண்கலம் வென்றிருந்தார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கம் ஆனது.
அரையிறுதியில் சிம்ரன்பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி12) தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா 24, பங்கேற்றார். பார்வை குறைபாடுள்ள இவருக்கு உதவியாக அபய் சிங் இருந்தார். இலக்கை 12.17 வினாடியில் அடைந்த சிம்ரன், தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய பாரா விளையாட்டில் 100, 200 மீ., ஓட்டத்தில் (டி12) வெள்ளி வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் 200 மீ., ஓட்டத்தில் (டி12) தங்கம் வென்றிருந்தார்.
தவிர பாட்மின்டனில் 5 (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), துப்பாக்கி சுடுதலில் 4 (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்), வில்வித்தையில் 2 பதக்கம் (1 தங்கம், 1 வெண்கலம்) கிடைத்தன.