தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் ஹேமந்த்: ஜூனியர் 'உலக' துப்பாக்கி சுடுதலில்

வெள்ளி வென்றார் ஹேமந்த்: ஜூனியர் 'உலக' துப்பாக்கி சுடுதலில்

வெள்ளி வென்றார் ஹேமந்த்: ஜூனியர் 'உலக' துப்பாக்கி சுடுதலில்


ADDED : ஏப் 26, 2026 07:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 07:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெய்ரோ: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஹேமந்த் வெள்ளி வென்றார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.,) எகிப்தின் கெய்ரோவில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதுல் ('ரைபிள்' / 'பிஸ்டல்'/ 'ஷாட் கன்') தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3பி' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் வேதாந்த் நிதின் (581.30 புள்ளி), ரோஹித் கன்யான் (581.22), ஹேமந்த் பர்மன் (580.25) முறையே 4, 6, 7வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய இந்தியாவின் ஹேமந்த், 351.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கஜகஸ்தானின் நோஸ்கோவ் ஒலெக் (355.6) தங்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் நிகிதா சோகோலோவ் (341.2) வெண்கலம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான ரோஹித் (311.9), வேதாந்த் (300.5) முறையே 6, 7வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என, 15 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us