/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஹிமான்ஷு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் ஹிமான்ஷு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஹிமான்ஷு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஹிமான்ஷு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
ADDED : செப் 29, 2025 10:46 PM

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹிமான்ஷு (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றார்.
டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹிமான்ஷு (633.7 புள்ளி), நரேன் பிரணவ் (629.5), அபினவ் ஷா (628.4) முறையே 1, 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஹிமான்ஷு (250.9) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அபினவ் ஷா (228.4) வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் நரேன் பிரணவ் (187.0) 5வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷாம்பவி ஷ்ரவன் (632.0 புள்ளி), ஓஜஸ்வி தாக்கூர் (631.9), ஹ்ருத்யா ஸ்ரீ (629.9) முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஓஜஸ்வி (252.7), ஹ்ருத்யா ஸ்ரீ (250.2), ஷாம்பவி (229.4) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் முகேஷ் (27.1), சூரஜ் சர்மா (21) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரர் சமீர் (15) 4வது இடம் பிடித்தார்.
இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என, 20 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.