sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: பெங்கால் அணி 'திரில்' வெற்றி

/

ஹாக்கி: பெங்கால் அணி 'திரில்' வெற்றி

ஹாக்கி: பெங்கால் அணி 'திரில்' வெற்றி

ஹாக்கி: பெங்கால் அணி 'திரில்' வெற்றி


ADDED : ஜன 01, 2026 10:31 PM

Google News

ADDED : ஜன 01, 2026 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: பெண்கள் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் டில்லியை வீழ்த்தியது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. டில்லி, ராஞ்சி, பெங்கால், சூர்மா என, 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை 'ரவுண்டு ராபின்' முறையில் மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (ஜன. 10) விளையாடும்.

லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 3-3 என சமநிலை வகித்தது. பெங்கால் சார்பில் அகஸ்டினா 2 (6, 18வது நிமிடம்), லால்ரெம்சியாமி ஒரு கோல் (11வது) அடித்தனர். டில்லி அணிக்கு லோலா ரியேரா (10, 60வது நிமிடம்), சுனேலிதா (59வது) கைகொடுத்தனர். பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய பெங்கால் அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் பெங்கால் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முதல் தோல்வியை பெற்ற டில்லி அணி (6 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us