ADDED : டிச 28, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் டில்லி அணி 4-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றி பெற்றது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் டில்லி, கோனாசிகா (விசாகப்பட்டனம்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. டில்லி அணிக்கு தாமஸ் டோமென் (5, 39வது நிமிடம்) கைகொடுத்தார். டில்லி அணி சார்பில் ராபர்ட் வால்கர் (26வது), விக்டர் சார்லட் (35வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் அபாரமாக ஆடிய டில்லி அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

