/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது ஜெர்மனி
/
ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது ஜெர்மனி
ADDED : பிப் 19, 2025 10:09 PM

புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என ஜெர்மனியை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024--25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மீண்டும் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய ஜெர்மனி அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஜெர்மனியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.
இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து இந்திய அணி, அயர்லாந்து(பிப். 21, 22), இங்கிலாந்துடன் (பிப். 24, 25) விளையாட உள்ளது.

