ADDED : ஜூலை 10, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்தோவன்: சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி, அயர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது.
நெதர்லாந்து சென்றுள்ள சஞ்சய் தலைமையிலான இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, 8 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த 2வது போட்டியில் மீண்டும் அயர்லாந்தை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 6-0 என, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு முகமது ரஹீல் 2, உத்தம் சிங், கேப்டன் சஞ்சய், அமன்தீப் லக்ரா, வருண் குமார் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
இந்திய அணி, 3வது போட்டியில் பிரான்சை நாளை சந்திக்கிறது.