/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா-ஆஸி., மோதல்
/
ஹாக்கி: இந்தியா-ஆஸி., மோதல்
ADDED : ஏப் 10, 2025 11:13 PM

புதுடில்லி: இந்தியா, ஆஸ்திரேலிய பெண்கள் ஹாக்கி அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் ஏப். 26, 27ல் நடக்கவுள்ள முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியை சந்திக்கிறது. கடைசி மூன்று போட்டியில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்கும்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் கூறுகையில், ''ஆஸ்திரேலிய தொடர், வரும் ஜூன் மாதம் ஐரோப்பாவில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டிகளுக்கான பயிற்சியாக அமையும். ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது கிடைக்கும் அனுபவம் மிகப் பெரிய தொடரில் சாதிக்க உதவும்,'' என்றார்.