தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: அர்ஜென்டினாவை வென்றது இந்தியா

ஹாக்கி: அர்ஜென்டினாவை வென்றது இந்தியா

ஹாக்கி: அர்ஜென்டினாவை வென்றது இந்தியா


ADDED : ஏப் 15, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அர்ஜென்டினா வென்றது. இரண்டாவது போட்டியில் எழுச்சி கண்ட இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. இன்று, மூன்றாவது போட்டி நடக்கவுள்ளது.

* கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கேரளா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

* ஜெர்மனியில் நடக்கும் பி.எம்.டபிள்யு., ஓபன் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 7-5, 7-6 என, ஜெர்மனியின் கெவின், டிம் புட்ஸ் ஜோடியை வீழ்த்தியது.

* தென் கொரியாவில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகேரு யுசூகி ஜோடி 6-2, 6-1 என தென் கொரியாவின் சுக் ஆன், ஜுன் கிம் ஜோடியை வீழ்த்தியது.

* உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு 'ரவுண்டு-16' சுற்றுக்கு தமிழகம், பெங்கால், டில்லி அணிகள் முன்னேறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us