/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி
/
ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி
ADDED : ஏப் 12, 2024 10:39 PM

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் தொடர்ந்து நான்காவது தோல்வி அடைந்தது இந்தியா. நேற்றைய போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26- முதல் ஆக. 11 வரை நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் தோற்ற இந்தியா, 0-3 என தொடரை இழந்தது. நான்காவது போட்டி நேற்று பெர்த்தில் நடந்தது.
போட்டியின் 13 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதன் பின் ஆஸ்திரேலிய அணியினர் ஆதிக்கம் துவங்கியது. 19 வது நிமிடத்தில் ஜெரிமி, ஒரு பீல்டு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜெரிமி (47 வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார். 55 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஜாக் வெல்ச் ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இது இத்தொடரில் அடைந்த நான்காவது தோல்வி.

