sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

/

ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

ஹாக்கி: காலிறுதியில் இந்தியா


ADDED : ஜன 29, 2024 10:54 PM

Google News

ADDED : ஜன 29, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட்: ஐவர் ஹாக்கி உலக கோப்பை காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 13-0 என ஜமைக்காவை வென்றது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஆண்களுக்கான ஐவர் ஹாக்கி உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்றது. இரண்டாவது போட்டியில் எகிப்திடம் வீழ்ந்தது.

மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, ஜமைக்கா அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த இந்தியா 13-0 என வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மனிந்தர் சிங் 4, மஞ்ஜீத், முகமது ரஹீல், மந்தீப் மோர் தலா 2, உத்தம் சிங், பவான் ராஜ்பார், குர்ஜோத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.

'பி' பிரிவில் விளையாடிய மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த இந்தியா 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் காலிறுதியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.






      Dinamalar
      Follow us