ADDED : ஜூன் 27, 2026 11:38 PM

லண்டன்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-1 என, பாகிஸ்தானை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஆண்களுக்கான புரோ லீக் 7வது சீசன் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக லண்டன் சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் தலா 2 போட்டியில் விளையாடுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 4-3 என வென்ற இந்தியா, இங்கிலாந்து அணியிடம் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 1-4 என தோல்வியடைந்தது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் சுக்ஜீத் சிங் (20வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (26), ஹர்திக் சிங் (34), ஜக்ராஜ் சிங் (35), அபிஷேக் (41), ராஜ் குமார் பால் (44), தில்பிரீத் சிங் (54) தலா ஒரு கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணிக்கு அபூ பக்கர் மஹ்மூத் (13வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
