ADDED : ஜன 07, 2026 10:57 PM

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் எச்.ஐ.எல்., அணி 6-3 என, பெங்கால் அணியை வீழ்த்தியது.
சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், எச்.ஐ.எல்., அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய எச்.ஐ.எல்., அணி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
எச்.ஐ.எல்., அணிக்கு கேன் ரசல் 3 (19, 36, 44வது நிமிடம்), சாம் வார்டு (19வது), சுதீப் சிர்மாகோ (38வது), ஜேம்ஸ் ஆல்பெரி (59வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பெங்கால் அணி சார்பில் கிறிஸ்டோபர் ரூர் (40வது நிமிடம்), டாம் கிராம்பஷ் (40வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த எச்.ஐ.எல்., அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் தமிழகம் அணி (5 புள்ளி) உள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் ஐதராபாத், ராஞ்சி அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சூர்மா வெற்றி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பெங்கால், சூர்மா கிளப் அணிகள் மோதின. இதில் சூர்மா கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பெற்றது.

