/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
/
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
ADDED : டிச 06, 2024 10:47 PM

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஜூனியர் (21 வயது) பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் இன்று துவங்குகிறது.
மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம், சீனா, மலேசியா, தாய்லாந்து உள்ளன. 'பி' பிரிவில் தென் கொரியா, இலங்கை, ஜப்பான், ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம். தவிர, 2025ல் நடக்கவுள்ள பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெறலாம்.
இந்திய அணி ஜோதி தலைமையில் களமிறங்குகிறது. துணைக் கேப்டனாக சாக் சி உள்ளார். தவிர 'சீனியர்' அணியில் விளையாடிய சுனேலிதா, மும்தாஜ், தீபிகா, பியூட்டி உள்ளிட்டோர் இருப்பது பலம்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இன்று நடக்கும் போட்டியில் மலேசியா - தாய்லாந்து, சீனா - வங்கதேசம் மோத உள்ளன.