/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலில் இந்திய பெண்கள் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில் அபாரம்
/
பைனலில் இந்திய பெண்கள் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில் அபாரம்
பைனலில் இந்திய பெண்கள் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில் அபாரம்
பைனலில் இந்திய பெண்கள் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில் அபாரம்
ADDED : டிச 14, 2024 07:28 PM

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. அரையிறுதியில் 3-1 என ஜப்பானை வென்றது.
ஓமனில், ஜூனியர் (19 வயது) பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 9வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, 4 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளி பெற்றது. பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
நேற்று இதில் ஜப்பானை சந்தித்தது. போட்டியின் 4வது நிமிடம் இந்திய வீராங்கனை மும்தாஜ், 'பீல்டு' கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் சாக்சி ராணா (5), தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
13வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. இதில் தீபிகா கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 12 வது கோல் இது. ஜப்பானின் நிகோ (23) ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இதை சமன் செய்ய, ஜப்பான் வீராங்கனைகள் போராடினர். கடைசி நேரத்தில் அடுத்தடுத்து 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தன. இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு கோல் வாய்ப்பை தடுத்தனர்.
முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.