தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கிடைக்குமா கவுரவம் * ஹர்மன்பிரீத் சிங், ஸ்ரீஜேஷ் பெயர் பரிந்துரை

கிடைக்குமா கவுரவம் * ஹர்மன்பிரீத் சிங், ஸ்ரீஜேஷ் பெயர் பரிந்துரை

கிடைக்குமா கவுரவம் * ஹர்மன்பிரீத் சிங், ஸ்ரீஜேஷ் பெயர் பரிந்துரை


ADDED : செப் 17, 2024 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாசேன்: சிறந்த வீரர், கோல்கீப்பர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் (எப்.ஐ.எச்.,) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 கோல் அடித்த இவர் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல கைகொடுத்தார். இவருடன் நெதர்லாந்தின் தியரி பிரங்க்மன், ஜோயப் டி மால், ஹன்னஸ் முல்லர் (ஜெர்மனி), ஜாச் வாலஸ் (இங்கிலாந்து) என 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

ஸ்ரீஜேஷ் நம்பிக்கை

சிறந்த கோல் கீப்பர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், தேர்வு பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் அசத்திய இவர், இந்தியா பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தவிர பிர்மின் பிளாக் (நெத்லாந்து), கல்ஜாடோ (ஸ்பெயின்), டேன்பெர்க் (ஜெர்மனி), சான்டியாகோ (அர்ஜென்டினா) பந்தயத்தில் உள்ளனர்.

இதற்கான ஓட்டுப்பதிவு வரும் அக். 11 வரை இணையதளத்தில் நடக்கும். பல்வேறு நாடுகளின் கேப்டன், பயிற்சியாளர், ரசிகர்கள், வீரர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் ஓட்டு அளிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us