sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

கோப்பை வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் எதிர்பார்ப்பு * பைனலில் தென் கொரியாவுடன் மோதல்

/

கோப்பை வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் எதிர்பார்ப்பு * பைனலில் தென் கொரியாவுடன் மோதல்

கோப்பை வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் எதிர்பார்ப்பு * பைனலில் தென் கொரியாவுடன் மோதல்

கோப்பை வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் எதிர்பார்ப்பு * பைனலில் தென் கொரியாவுடன் மோதல்


ADDED : செப் 06, 2025 10:51 PM

Google News

ADDED : செப் 06, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலில் இன்று இந்தியா, தென் கொரியா மோதுகின்றன. இதில் இந்தியா அசத்தினால், கோப்பை கைப்பற்றலாம்.

பீஹாரின் ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.

ஜப்பான், கஜகஸ்தான், வங்கதேசம், சீன தைபே என நான்கு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இந்தியா, சீனா, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா என நான்கு அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின. இதில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், இந்திய அணி முதல் இரு போட்டி முடிவில் 4 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தது.

வீழ்ந்தது சீனா

நேற்று கடைசி ஆட்டத்தில் சீனாவை சந்தித்தது. இதில் குறைந்தபட்சம் 'டிரா' செய்தால், பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் இந்தியாவின் ஜர்மன்பிரீத் சிங் பந்தை ஷிலானந்த் லக்ராவுக்கு 'பாஸ்' செய்தார். இதைப் பெற்ற ஷிலானந்த், பீல்டு கோல் அடித்தார். 7வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் தில்பிரீத் சிங் கோல் அடித்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் மன்தீப் சிங் (18), 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 3-0 என முந்தியது.

இரண்டாவது பாதியில் இந்தியாவின் அபிஷேக் (46, 50) இரண்டு கோல் அடித்தார். ராஜ்குமார் (37), சுக்ஜீத் சிங் (38), தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் 7 புள்ளியுடன் (2 வெற்றி, 1 'டிரா') முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று தென் கொரியாவை சந்திக்க உள்ளது.

மலேசியா ஏமாற்றம்

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தென் கொரியா, மலேசியா மோதின. 43 நிமிடம் வரை மலேசிய அணி 3-1 என முன்னிலை பெற்றிருந்தது. தென் கொரியா கடைசி நேரத்தில் எழுச்சி பெற்றது. சேயங் (44), கேப்டன் ஜங்ஜுன் (50), ஹியான்ஹங் (51) அடுத்தடுத்து கோல் அடிக்க, தென் கொரியா 4-3 என 'திரில்' வெற்றி பெற்றது. 4 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

மலேசியா (3)-சீன (3) அணிகள் 3வது இடத்துக்கான போட்டியில் இன்று மோத உள்ளன.






      Dinamalar
      Follow us