/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங்
/
சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங்
ADDED : நவ 09, 2024 10:49 PM

லாசேன்: உலக ஹாக்கி அரங்கின் சிறந்த வீரராக ஹர்மன்பிரீத் சிங், சிறந்த கோல் கீப்பராக ஸ்ரீஜேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 2024ம் ஆண்டு சிறந்து விளங்கிய நட்சத்திரங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், நெதர்லாந்து வீரர்கள் தியரி பிரிங்க்மென், ஜோயப், ஜெர்மனியின் ஹன்னெஸ் மில்லர், இங்கிலாந்தின் ஜாச் வாலஸ் இடம் பெற்றனர். இணையதள வழியாக ஓட்டெடுப்பு நடந்தது.
இதில், சிறந்த வீரராக ஹர்மன்பிரீத் சிங் தேர்வானார். கடந்த 2020-21, 2021-22, தற்போது என மூன்றாவது முறையாக சிறந்த வீரர் ஆனார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 கோல் அடித்த இவர், இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வெல்ல உதவியாக இருந்தார்.
ஸ்ரீஜேஷ் அபாரம்
சிறந்த கோல் கீப்பராக இந்தியாவின் ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், மூன்றாவது முறையாக தேர்வானார். முன்னதாக 2020-21, 2021-22ல் இவ்விருது வென்றார். பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி பெரும்பாலான நேரத்தில் 10 வீரர்களுடன் விளையாடியது. இருப்பினும் ஸ்ரீஜேஷ் துணிச்சலாக போராடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
நெதர்லாந்தின் இப்பி ஜான்சென், சிறந்த வீராங்கனை ஆனார்.
ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று திரும்பிய தருணம் சிறப்பானது. சக வீரர்கள் இல்லாமல், எனக்கு விருது எனக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை'' என்றார்.