ADDED : அக் 28, 2024 07:00 PM

புதுடில்லி: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணிக்கு சலிமா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் பீஹாரில் உள்ள ராஜ்கிர் மைதானத்தில், பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷ் டிராபி ஹாக்கி தொடர், வரும் நவ. 11-20ல் நடக்கவுள்ளது. இந்தியா, மலேசியா, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் என ஆறு அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை (நவ. 11) சந்திக்க உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே புரோ ஹாக்கி தொடரில் முதன் முறையாக கேப்டனாக செயல்பட்ட, சலிமா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக நவ்னீத் கவுர் அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ராஞ்சியில் நடந்த தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது. இம்முறையும் இந்தியா கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
அணி விபரம்: சலிமா (கேப்டன்), நவ்னீத் கவுர் (துணை கேப்டன்), சவிதா, பிச்சு தேவி (கோல்கீப்பர்), உதித்தா, வைஷ்ணவி, ஜோதி, சுஷிலா, இஷிகா , நேஹா, ஷர்மிளா, மணிஷா, சுனேலிதா, லால்ரெம்சியாமி, பிரீத்தி, சங்கீதா, தீபிகா, பியூட்டி டங்டங்.