தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்

ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்

ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்


ADDED : செப் 04, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி, இந்தோனேஷியாவை சந்திக்கிறது.

ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 1988 முதல் ஜூனியர் அணிகளுக்கான (21 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள்) ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது.

ஆண்கள் பிரிவில் இதுவரை நடந்த 10 தொடரில் இந்தியா அதிகபட்சம் 5 முறை (2004, 2008, 2015, 2023, 2024) கோப்பை வென்றது. இதன் 11 வது தொடர் சீனாவில் நடக்கிறது.

நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

கடந்த மூன்று தொடரில் சாதித்து 'ஹாட்ரிக்' பட்டம் வென்ற இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. இன்று தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவை சந்திக்கிறது. அடுத்து ஜப்பான் (நாளை), தென் கொரியா (செப். 8), சீன தைபேவுடன் (செப். 9) அணிகளுடன் விளையாடுகிறது.

கேப்டனாக தற்காப்பு பகுதி வீரர் அன்மோல் எக்கா, பயிற்சியாளராக பிரடெரிக் சோயஸ் உள்ளனர். இத்தொடருக்காக பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி என வலுவான அணிகளுடன் விளையாடி, இந்தியா தயாராக உள்ளது.

மீண்டும் ஆதிக்கம் தொடர்ந்தால், ஆறாவது கோப்பை வெல்லலாம்.

கிடைக்குமா 'ஹாட்ரிக்'

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பெண்கள் பிரிவில் 10 அணிகள் மோதுகின்றன. இந்தியா, சீனா உட்பட 5 அணிகள் 'எலைட்' பிரிவில் உள்ளன. முதலில் லீக் முறையில் போட்டி நடக்கும். பின் 5 அணிகளும் காலிறுதியில் பங்கேற்கும். மீதமுள்ள பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 5 அணிகள் 'சாலஞ்ச்' பிரிவில் உள்ளன. இதில் 'டாப்-3' அணிகள் காலிறுதிக்கு செல்லலாம்.

இன்று இந்திய பெண்கள் அணி, தனது முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் ஆன தென் கொரியாவை சந்திக்கிறது. அடுத்து மலேசியா (செப். 6), ஜப்பான் (செப். 8), சீனாவுடன் (செப். 9) மோதும்.

ஏற்கனவே இரு முறை சாதித்த இந்தியா (2023, 2024), கேப்டன் ஷிலெய்மா சானு தலைமையில் மீண்டும் அசத்தினால் 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us