sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: அரையிறுதியில் இளம் இந்தியா * திக்...திக்... போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது

/

ஹாக்கி: அரையிறுதியில் இளம் இந்தியா * திக்...திக்... போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது

ஹாக்கி: அரையிறுதியில் இளம் இந்தியா * திக்...திக்... போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது

ஹாக்கி: அரையிறுதியில் இளம் இந்தியா * திக்...திக்... போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது


ADDED : டிச 05, 2025 11:56 PM

Google News

ADDED : டிச 05, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வீழ்த்தியது.

சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகளுடன், 2வது இடம் பிடித்த 'டாப்-2' அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

நேற்று சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், காலிறுதி போட்டிகள் நடந்தன. 'பி' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா, 'டி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற 'ரெட் லயன்ஸ்' என அழைக்கப்படும், பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

13வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் காஸ்பர்டு 'ரிவர்ஸ் பிளிக்' முறையில் கோல் அடித்தார்.

இந்தியா 0-1 என பின்தங்கியது. 27 வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய மன்மீத் (இந்தியா), நிக்கோலசிற்கு (பெல்ஜியம்) 'கிரீன் கார்டு' காட்டப்பட, 2 நிமிடம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரு அணிகளும் தலா 10 வீரர்களுடன் விளையாடின.

42வது நிமிடம் இடது முழங்கையால், பெல்ஜியம் கேப்டன் லுகாஸ் முகத்தில் குத்து விட்ட இந்தியாவின் குர்ஜோத், 'கிரீன் கார்டுடன்' தப்பித்தார். 44 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை, கேப்டன் ரோகித் கோலாக மாற்ற, சற்று நிம்மதி பிறந்தது. அடுத்த 3 வது நிமிடம் இந்தியாவுக்கு மற்றொரு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை ஷர்தானந்த் திவாரி, கோல் அடிக்க மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தியா 2-1 என முந்தியது.

போட்டி முடிய 1 நிமிடம் இருந்த போது, பெல்ஜியம் வீரர் நாதன், பீல்டு கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என ஆனது. முடிவில் போட்டி 2-2 என சமன் ஆக, வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷுட் அவுட்' நடந்தது.

'திரில்' வெற்றி

இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முதல் 3 வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமன் ஆக, 'டென்ஷன்' அதிகரித்தது. பெல்ஜியத்தின் அடுத்த இரு வாய்ப்பை, இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் அசத்தலாக தடுத்தார். 4 வது வாய்ப்பை வீணடித்த இந்தியா, கடைசி வாய்ப்பில் கோல் அடித்தது.

முடிவில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச. 7ல் சென்னையில் நடக்க உள்ள அரையிறுதியில் இந்தியா-ஜெர்மனி (மாலை 5:30 மணி), ஸ்பெயின்-அர்ஜென்டினா (இரவு 8:00 மணி) மோத உள்ளன.

ஸ்பெயின் அபாரம்

நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-3 என 'திரில்' வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி, காலிறுதியில் பிரான்சை சந்தித்தது. இப்போட்டி 2-2 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

* மூன்றாவது காலிறுதியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து மோதின. 52 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில், கேப்டன் தாமஸ் கோல் அடித்து உதவ, அர்ஜென்டினா அணி 1-0 என வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us