தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி தமிழகம் அசத்தல் * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...

ஹாக்கி தமிழகம் அசத்தல் * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...

ஹாக்கி தமிழகம் அசத்தல் * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...


ADDED : ஜன 06, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், தமிழக டிராகன்ஸ் அணி 3-2 என சூர்மா அணியை வீழ்த்தியது.

ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, சூர்மா அணியை சந்தித்தது. 28 வது நிமிடம் தமிழக டிராகன்ஸ் அணிக்கு செல்வராஜ் ஒரு கோல் அடித்தார். போட்டியின் 30 வது நிமிடத்தில் உத்தம் சிங், 'ரிவர்ஸ் பிளிக்' முறையில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-0 என முந்தியது.

இரண்டாவது பாதியில் சூர்மா வீரர் மனிந்தர் சிங் (45) ஒரு கோல் அடித்தார். 47 வது நிமிடம் தமிழக டிராகன்ஸ் அணிக்கு பிளேக் கோவர்ஸ், கோல் அடித்து உதவினார். சூர்மா அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (57) 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடித்தார்.

முடிவில் தமிழக டிராகன்ஸ் அணி 3-2 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது.

பெங்கால் வெற்றி

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால் டைகர்ஸ், எஸ்.ஜி., பைபர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முடிவில் ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. அடுத்து 'ஷூட் ஆப்' நடந்தது. முடிவில் பெங்கால் அணி 7-6 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு பட்டியலில் பைப்பர்ஸ் (11 புள்ளி), பெங்கால் (10), ராஞ்சி (6), சூர்மா (3) அணிகள், நான்கு இடத்தில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us