தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மீண்டும் ஹாக்கி இந்தியா லீக் * 7 ஆண்டுக்குப் பின்...

மீண்டும் ஹாக்கி இந்தியா லீக் * 7 ஆண்டுக்குப் பின்...

மீண்டும் ஹாக்கி இந்தியா லீக் * 7 ஆண்டுக்குப் பின்...


ADDED : அக் 04, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் தொடர், ஏழு ஆண்டுக்குப் பின் மீண்டும் நடக்க உள்ளது. இம்முறை பெண்களுக்கான தொடரும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. ஆறு அணிகள் மோதின. கடைசியாக 2017ல் கலிங்கா அணி சாம்பியன் ஆனது. பின் இத்தொடர் நடக்கவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் ஆறாவது சீசன், வரும் டிச. 28- 2025, பிப் 1 வரை நடக்கவுள்ளது.

ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி உரிமையாளராக உள்ள டில்லி, ராஞ்சி, லக்னோ, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, ஐதராபாத்துடன் முதன் முறையாக சென்னை அணியும் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகள் ரூர்கேலாவில் நடக்கும்.

முதன் முறை

தவிர, முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது. ஹரியானா, மேற்கு வங்கம், டில்லி, ஒடிசா உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகள் ராஞ்சியில் நடக்க உள்ளன.

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் வரும் அக். 13-15ல் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 24 பேர் (16 இந்திய வீரர்-8 வெளிநாட்டு வீரர்) இடம் பெறுவர். ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மூன்று பிரிவுகளில் ஹாக்கி நட்சத்திரங்கள் ஏலத்தில் இடம் பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us