/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி இந்தியா லீக் எப்போது * டில்லி-விசாகப்பட்டனம் மோதல்
/
ஹாக்கி இந்தியா லீக் எப்போது * டில்லி-விசாகப்பட்டனம் மோதல்
ஹாக்கி இந்தியா லீக் எப்போது * டில்லி-விசாகப்பட்டனம் மோதல்
ஹாக்கி இந்தியா லீக் எப்போது * டில்லி-விசாகப்பட்டனம் மோதல்
ADDED : நவ 05, 2024 11:24 PM

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் தொடர், வரும் டிசம்பர் 28ல் ரூர்கேலாவில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் டில்லி-விசாகப்பட்டனம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. கடைசியாக 2017ல் கலிங்கா அணி சாம்பியன் ஆனது. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், இத்தொடரின் ஆறாவது சீசன், வரும் டிச. 28- 2025, பிப் 1 வரை நடக்கவுள்ளது.
இம்முறை ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. இவை இரு பிரிவுகளாக நடக்க உள்ளன. முதலில் டிச. 28 முதல் 2025, ஜன. 18 வரை 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
ஜன. 19 முதல் இரண்டாவது கட்ட போட்டி துவங்கும். இம்முறை 8 அணிகள் தலா 4 என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். 'ஏ' பிரிவில் டில்லி, ராஞ்சி, சூர்மா கிளப் (பஞ்சாப்), கலிங்கா லான்சர்ஸ் (ஒடிசா), 'பி' பிரிவில் கோனாசிகா (விசாகப்பட்டனம்), ஐதராபாத், தமிழக டிராகன்ஸ், ருத்ராஸ் (லக்னோ) அணிகள் இடம் பெறும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். பின் பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் ஜன. 31ல் நடக்கவுள்ள அரையிறுதிக்கு முன்னேறும். 3வது இடத்துக்கான போட்டி, பைனல் என இரண்டும், பிப். 1ல் நடக்க உள்ளது.
தற்போது டிச. 28ல் துவங்கும் முதல் போட்டியில் டில்லி, கோனாசிகா அணிகள் மோத காத்திருக்கின்றன.
முதன் முறை
ஹாக்கி லீக் தொடரில் முதன் முறையாக பெண்களுக்கான போட்டியும் நடக்க உள்ளது. டில்லி, ஒடிசா, பெங்கால் (கோல்கட்டா), சூர்மா என 4 அணிகள் மோதவுள்ள இத்தொடர் ஜன. 12ல் ராஞ்சியில் துவங்கும். முதல் போட்டியில் டில்லி-ஒடிசா பலப்பரீட்சை நடத்த உள்ளன. பைனல் பிப். 1ல் நடக்கும்.