தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/துவங்குகிறது ஹாக்கி இந்தியா லீக் * டில்லி - விசாகப்பட்டனம் பலப்பரீட்சை

துவங்குகிறது ஹாக்கி இந்தியா லீக் * டில்லி - விசாகப்பட்டனம் பலப்பரீட்சை

துவங்குகிறது ஹாக்கி இந்தியா லீக் * டில்லி - விசாகப்பட்டனம் பலப்பரீட்சை


ADDED : டிச 27, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் தொடர், 7 ஆண்டுக்குப் பின் இன்று ரூர்கேலாவில் துவங்குகிறது. முதல் மோதலில் டில்லி, விசாகப்பட்டனம் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பின், இத்தொடரின் ஆறாவது சீசன், இன்று துவங்குகிறது. 2025, பிப் 1 வரை நடக்கும் இத்தொடரில் 8 அணிகள் களமிறங்குகின்றன.

இவை இரு பிரிவுகளாக நடக்க உள்ளன. இன்று முதல் 2025, ஜன. 18 வரை 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஜன. 19 முதல் இரண்டாவது கட்ட போட்டி துவங்கும்.

இதில் 8 அணிகள் தலா 4 என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். 'ஏ' பிரிவில் டில்லி, ராஞ்சி, சூர்மா கிளப் (பஞ்சாப்), கலிங்கா லான்சர்ஸ் (ஒடிசா), 'பி' பிரிவில் கோனாசிகா (விசாகப்பட்டனம்), ஐதராபாத், தமிழக டிராகன்ஸ், ருத்ராஸ் (லக்னோ) அணிகள் இடம் பெறும்.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். பின் பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் ஜன. 31ல் நடக்கவுள்ள அரையிறுதிக்கு முன்னேறும். 3வது இடத்துக்கான போட்டி, பைனல் என இரண்டும், பிப். 1ல் நடக்க உள்ளது.

இன்று ரூர்கேலாவில் நடக்கும் முதல் போட்டியில் டில்லி, விசாகப்பட்டனம் (கோனாசிகா) அணிகள் மோத காத்திருக்கின்றன.

பெண்கள் தொடர் எப்போது

ஹாக்கி லீக் தொடரில் முதன் முறையாக பெண்களுக்கான போட்டியும் நடக்க உள்ளது. டில்லி, ஒடிசா, பெங்கால் (கோல்கட்டா), சூர்மா என 4 அணிகள் மோதவுள்ள இத்தொடர் ஜன. 12ல் ராஞ்சியில் துவங்கும். முதல் போட்டியில் டில்லி-ஒடிசா பலப்பரீட்சை நடத்த உள்ளன.

லீக் சுற்று முடிவில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள், ஜன, 26ல் ராஞ்சியில் நடக்கவுள்ள பைனலில் மோதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us