தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கி: அர்ஜென்டினா சாம்பியன்

உலக ஹாக்கி: அர்ஜென்டினா சாம்பியன்

உலக ஹாக்கி: அர்ஜென்டினா சாம்பியன்


ADDED : ஆக 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை பெண்கள் ஹாக்கியில் அர்ஜென்டினா சாம்பியன் ஆனது.

நெதர்லாந்து, பெல்ஜியத்தில், உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள், பெண்கள் பிரிவு) 16வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான தொடரில் நேற்று நடந்த பைனலில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் 'நம்பர்-1', நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணி, 2 முறை சாம்பியன் ஆன, 'நம்பர்-2' அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.

சொந்த மண் உற்சாகத்தில் 14வது முறை பைனலில் பங்கேற்றது நெதர்லாந்து அணிக்கு, முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடித்து அணிக்கு கைகொடுத்தார் இப்பி ஜான்சன். இத்தொடரில் அதிக கோல் அடித்தவர்களில் முதலிடம் பிடித்தார் இப்பி (8 கோல்).

54வது நிமிடம் அர்ஜென்டினாவின் மரியா ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் அர்ஜென்டினா அணி 3-1 என வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது.

பெல்ஜியம் 'மூன்று'

நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா மோதின. இதில், இங்கிள்பெர்ட் ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வெண்கல பதக்கம் தட்டிச் சென்றது.

இந்தியாவுக்கு ரூ. 50 லட்சம்

இந்திய பெண்கள் அணி, ஜெர்மனியை வீழ்த்தி 5வது இடம் பிடித்தது. 1974 (4வது) தொடருக்குப் பின் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாக இது அமைந்தது. இதையடுத்து ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டது.

எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,'' 52 ஆண்டுக்குப் பின் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி 5வது இடம் பிடித்தது வரலாற்று சிறப்பு மிக்கது. இத்தொடர் முழுவதும் கடின முயற்சி, மன உறுதி, போராட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த வெற்றி இது. எச்.ஐ., சார்பில் பெண்கள் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்குகிறோம்,'' என்றார்.

ஸ்பெயின்-ஜெர்மனி பலப்பரீட்சை

ஆண்களுக்கான உலக ஹாக்கி பைனலில் இன்று ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து மோத உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us