இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
ADDED : ஜூலை 21, 2026 11:06 PM

புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் ஆக. 14-30ல் 16வது சீசன் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்க உள்ளது. 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28) முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.
இந்திய அணி 'டி' பிரிவில் வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இதற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடர்கிறார். கோல் கீப்பர்களாக மோஹித், சுராஜ் உள்ளனர்.
அணி விபரம்
கோல் கீப்பர்: மோஹித், சுராஜ்
தற்காப்பு வீரர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ், சஞ்சய், சுமித், யஷ்தீப்.
மத்திய கள வீரர்கள்: ராஜிந்தர் சிங், ஆதித்யா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நிலகண்டா, விவேக் பிரசாத்.
