/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா-பெல்ஜியம் மோதல் * ஹாக்கி புரோ லீக் தொடரில்...
/
இந்தியா-பெல்ஜியம் மோதல் * ஹாக்கி புரோ லீக் தொடரில்...
இந்தியா-பெல்ஜியம் மோதல் * ஹாக்கி புரோ லீக் தொடரில்...
இந்தியா-பெல்ஜியம் மோதல் * ஹாக்கி புரோ லீக் தொடரில்...
ADDED : பிப் 10, 2026 09:52 PM

ரூர்கேலா: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம்.
இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. அடுத்து நாளை அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மீண்டும் இரண்டாவது முறையாக பிப். 14ல் பெல்ஜியம், பிப். 15ல் அர்ஜென்டினாவை சந்திக்கும். இப்போட்டிகள் ரூர்கேலாவில் நடக்க உள்ளன.
கடந்த 2013 முதல் இந்தியா, பெல்ஜியம் மோதிய 35 போட்டியில் இந்தியா 11ல் மட்டும் வென்றது. 22ல் பெல்ஜியம் சாதித்துள்ளது. 2 போட்டி 'டிரா' ஆனது. இம்முறை சொந்தமண் பலத்தில் இந்தியா சாதிக்க முயற்சிக்கலாம்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' அமன்தீப் லக்ரா, மன்மீட் சிங், ரோசன், என இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது. சமீபத்திய இந்திய ஹாக்கி லீக் தொடரில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதை மீண்டும் தொடர்ந்தால், வெற்றி எளிதாகும்,'' என்றார்.

