ADDED : பிப் 11, 2026 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூர்கேலா: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம்.
இந்திய அணி, சொந்தமண்ணில் பெல்ஜியம், அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. நேற்று ரூர்கேலாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு 29 வது நிமிடத்தில் ஷிலானந்த் லக்ரா, ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். பெல்ஜியம் தரப்பில் ஒனானா (23), குரோல்ஸ் (53), டெஸ்செல் (57) தலா ஒரு கோல் அடித்தனர்.
இன்று இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

