/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா மீண்டும் ஏமாற்றம் * புரோ லீக் ஹாக்கியில்...
/
இந்தியா மீண்டும் ஏமாற்றம் * புரோ லீக் ஹாக்கியில்...
இந்தியா மீண்டும் ஏமாற்றம் * புரோ லீக் ஹாக்கியில்...
இந்தியா மீண்டும் ஏமாற்றம் * புரோ லீக் ஹாக்கியில்...
ADDED : பிப் 12, 2026 10:37 PM

ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியடைந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, சொந்தமண்ணில் பெல்ஜியம், அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. போட்டிகள் ஒடிஷா மாநிலம் ரூர்கேலாவில் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பெல்ஜியத்திடம் (1-3) தோற்றது.
நேற்று இரண்டாவது போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. 14வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார். இதன் பின் அர்ஜென்டினாவின் டொமெனே (15, 20, 26 வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
தாமஸ் ருய்ஸ் (14), லுசியோ (22), இக்னாசியோ (25), நிகோலஸ் (30) தங்கள் பங்கிற்கு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-7 என பின்தங்கியது. கடைசி நிமிடத்தில் டொமெனே (60) இப்போட்டியில் தனது நான்காவது கோல் பதிவு செய்தார். இந்திய அணி தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.
முடிவில் இந்திய அணி 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

