தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை * புரோ ஹாக்கி லீக் தொடரில்...

இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை * புரோ ஹாக்கி லீக் தொடரில்...

இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை * புரோ ஹாக்கி லீக் தொடரில்...


ADDED : பிப் 20, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹோபர்ட்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. சொந்தமண்ணில் இத்தொடரை துவக்கிய இந்திய அணி, பெல்ஜியம் (2), அர்ஜென்டினா (2) அணிகளுக்கு எதிரான முதல் நான்கு போட்டியிலும் தோற்றது.

தற்போது, இரண்டாவது கட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இங்கு ஸ்பெயின், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டியில் பங்கேற்க உள்ளது.

இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி ('நம்பர்-8'), ஸ்பெயினை ('நம்பர்-6') எதிர்கொள்கிறது. நாளை ஆஸ்திரேலியாவை சந்திக்கும். பின் மீண்டும் ஸ்பெயின் (பிப். 24), ஆஸ்திரேலியாவுடன் (பிப். 25) மோத உள்ளது.

நடப்பு ஆண்டில் உலக கோப்பை ஹாக்கி, 2028 ஒலிம்பிக் தகுதிச்சுற்று, ஆசிய விளையாட்டு என முக்கிய தொடர்கள் வரவுள்ள நிலையில், புரோ லீக் தொடரில் இந்திய அணி கடைசியாக பங்கேற்ற, 12 போட்டிகளில் 11ல் தோற்றுள்ளது, ஏமாற்றம் தருகிறது.

'ரெகுலர்' கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய நிலையில், மத்திய கள வீரர் ஹர்திக் சிங் கேப்டனாக செயல்பட உள்ளார். இதனால், அமன்தீப் லக்ரா, அராய்ஜீத் திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தவிர ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ் அணியின் வெற்றிக்கு உதவலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us