ADDED : பிப் 21, 2026 10:50 PM

ஹோபர்ட்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 0-2 என ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர், 7வது சீசன் நடத்தப்படுகிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நேற்று ஸ்பெயினை எதிர்கொண்டது.
இத்தொடரில் தனது முதல் 4 போட்டியில் தோற்ற இந்திய அணி, புதிய கேப்டன் ஹர்திக் சிங் தலைமையில் களமிறங்கியது.
துவக்கத்தில் பந்தை வேகமாக 'பாஸ்' செய்த இந்திய அணியினர், போட்டியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மறுபக்கம் தாக்குதல் ஆட்டத்தை துவங்கிய ஸ்பெயின் அணிக்கு 6வது நிமிடம் இக்னாசியோ அபாஜோ முதல் கோல் அடித்தார்.
36 வது நிமிடம் ஸ்பெயினின் கோபோஸ் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
12 தோல்வி
புரோ ஹாக்கி தொடரில் கடந்த ஆண்டு (8ல் 7 தோல்வி), தற்போது தொடர்ந்து 5 என, 13 போட்டிகளில் 12ல் இந்தியா தோல்வியடைந்தது.

