/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: போராடி வீழ்ந்தது இந்தியா
/
ஹாக்கி: போராடி வீழ்ந்தது இந்தியா
ADDED : பிப் 24, 2026 09:54 PM

ஹோபர்ட்: புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி தொடர்ந்து 7வது தோல்வி அடைந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர், 7வது சீசன் நடத்தப்படுகிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் விளையாடுகிறது. நேற்று மீண்டும் ஸ்பெயினை சந்தித்தது.
19 வது நிமிடத்தில் இந்திய வீரர் மணிந்தர் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 1-0 என வெற்றி பெற இருந்தது. போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது, ஸ்பெயினின் பான்ட் (59) கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட்' நடந்தது.
இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முதல் 4 வாய்ப்பில் இந்தியா 3 (லக்ரா, மணிந்தர், ராஜ்குமார்), ஸ்பெயின் 4 கோல் அடித்தன. 5வது, கடைசி வாய்ப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் ஏமாற்றினார். முடிவில் இந்தியா 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. 7 போட்டியில் 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
தொடரும் சோகம்
இத்தொடரில் தொடர்ந்து 7வது போட்டியில் இந்தியா தோற்றது. தவிர, புரோ ஹாக்கி தொடரில் கடந்த ஆண்டு (8ல் 7 தோல்வி), தற்போது 7 என, கடைசியாக களமிறங்கிய 15 போட்டிகளில் 14ல் இந்தியா தோல்வியடைந்தது.

