தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியா-நெதர்லாந்து மோதல் * புரோ ஹாக்கி லீக் தொடரில்...

இந்தியா-நெதர்லாந்து மோதல் * புரோ ஹாக்கி லீக் தொடரில்...

இந்தியா-நெதர்லாந்து மோதல் * புரோ ஹாக்கி லீக் தொடரில்...


ADDED : ஜூன் 06, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டெல்வீன்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16) முதல் இரு இடத்தில் உள்ளன.

இந்திய அணி தனது சொந்தமண்ணில் பங்கேற்ற 8 போட்டியில் 5 வெற்றியுடன் (3 தோல்வி) 15 புள்ளி எடுத்து, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 8 போட்டிகள் அன்னிய மண்ணில் நடக்க உள்ளன.

இதற்கு தயாராகும் வகையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி, 2 நட்பு போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது. தற்போது நெதர்லாந்து மண்ணில் இந்திய அணி, முதல் போட்டியில் பங்கேற்கிறது. அடுத்து ஜூன் 7ல் மீண்டும் நெதர்லாந்து, ஜூன் 11, 12 ல் அர்ஜென்டினாவுடன் விளையாட உள்ளது. பின் ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (ஜூன் 21, 22) அணிகளுக்கு எதிராக மோத உள்ளது.

இதில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றால், 2026ல் நடக்க உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு (2026, ஆக. 14-30, பெல்ஜியம், நெதர்லாந்து) இந்தியா நேரடியாக தகுதி பெறும்.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் கோல் கீப்பராக கிரிஷன் பதக், சுராஜ் கார்கெரா உள்ளனர். தவிர முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங், துணைக் கேப்டன் ஹர்திக், விவேக், குர்ஜந்த் சிங், அபிஷேக், மன்தீப் சிங், லலித் குமார் உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us