உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்தியாவிடம் சரிந்தது ஆஸி., * பெண்கள் ஹாக்கி தொடரில்...
இந்தியாவிடம் சரிந்தது ஆஸி., * பெண்கள் ஹாக்கி தொடரில்...
ADDED : மே 29, 2026 10:50 PM

அ நிறம் | அளவு
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி நான்கு போட்டி கொண்ட நட்பு தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 1-2 என தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா 'ஷூட் அவுட்டில்' (4-2) வெற்றி பெற்றது. நேற்று மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 36 வது நிமிடத்தில் இந்தியாவின் சோனம் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு, 49 வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது 2-1 என தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
