/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பெண்கள் ஹாக்கி * பயிற்சியாளர் விலகல்
/
பெண்கள் ஹாக்கி * பயிற்சியாளர் விலகல்
ADDED : டிச 01, 2025 11:19 PM

புதுடில்லி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக கடந்த 2024 முதல் ஹரேந்திரா சிங் 56, இருந்தார். இவரது பயிற்சியில் 2016ல் லக்னோவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி சாம்பியன் ஆனது.
கடந்த ஒரு ஆண்டாக இந்திய பெண்கள் அணி, சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. 16 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. புரோ ஹாக்கி தொடரில், மோசமான செயல்பாடு காரணமாக, அடுத்த சீசனுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
இதனால், இந்திய ஹாக்கி அமைப்புக்கு ஹரேந்திரா சிங் அனுப்பிய 'இ-மெயில்' கடிதத்தில்,' இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். தனிப்பட்ட காரணங்களுக்காக பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,' என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நெதர்லாந்தின் சிஜோர்டு மரிஜ்னே 51, பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

