sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக ஹாக்கி: அசத்துமா இந்தியா

/

உலக ஹாக்கி: அசத்துமா இந்தியா

உலக ஹாக்கி: அசத்துமா இந்தியா

உலக ஹாக்கி: அசத்துமா இந்தியா


ADDED : மார் 10, 2026 11:02 PM

Google News

ADDED : மார் 10, 2026 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர், வரும் ஆக. 14-30ல் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்க உள்ளது.

இதற்கான தகுதிச்சுற்று இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 'டாப்-3' இடம் பெறும் அணிகள் 'உலக' தொடருக்கு தகுதி பெறலாம்.

இந்திய அணி 'பி' பிரிவில், ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என உருகுவேயை வென்றது.

அடுத்து ஸ்காட்லாந்துக்கு எதிராக 'டிரா' (2-2) செய்தது. இதுவரை 2 போட்டியில் 4 புள்ளி பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்று தனது மூன்றாவது, கடைசி போட்டியில் இந்திய அணி, வேல்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் குறைந்தபட்சம் 'டிரா' செய்தால், புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம்.

இந்தியாவின் இளம் வீராங்கனை சுனேலிதா அசத்தலான 'பார்மில்' உள்ளார். தவிர அன்னு, இஷிகா, நவ்னீத் கவுர், ருடுஜா, லால்ரெம்சியாமி கைகொடுக்கலாம். கோல்கீப்பர் பிச்சு தேவி, எதிரணி வாய்ப்புகளை தடுத்து உதவுகிறார்.

வேல்ஸ் அணியை பொறுத்தவரையில் முதல் இரு போட்டியிலும் தோற்றுள்ளது. இன்று வென்றாலும் அடுத்த அரையிறுதிக்கு செல்ல முடியாது.






      Dinamalar
      Follow us