/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம்: சிறந்த வீரராக தேர்வு
/
நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம்: சிறந்த வீரராக தேர்வு
ADDED : ஜன 10, 2025 09:12 PM

புதுடில்லி: உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப்பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக தேர்வானார். கடந்த ஆண்டு வெளியான 2023க்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின்லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார்.
இப்பட்டியலில் 2வது இடத்தை கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 27, கைப்பற்றினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், டைமண்ட் லீக் பைனலில் தங்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு இப்பட்டியலில் 5வது இடம் கிடைத்தது. மூன்றாவது, 4வது இடத்தை செக்குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் கைப்பற்றினர்.