/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் ஹம்பி: உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
/
வெண்கலம் வென்றார் ஹம்பி: உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
வெண்கலம் வென்றார் ஹம்பி: உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
வெண்கலம் வென்றார் ஹம்பி: உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
ADDED : டிச 28, 2025 11:33 PM

தோகா: உலக 'ரேபிட்' செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹம்பி வெண்கலம் கைப்பற்றினார்.
கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன.
இதன் பெண்கள் பிரிவில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் கொனேரு ஹம்பி, 8வது, 9வது சுற்று ஆட்டத்தை 'டிரா' செய்தார். பின் 10வது சுற்றில் வெற்றி பெற்ற ஹம்பி, சகவீராங்கனை சவிதா ஸ்ரீக்கு எதிரான 11வது சுற்றை 'டிரா' செய்தார். முடிவில், 6 வெற்றி, 5 'டிரா' என, 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை உறுதி செய்த ஹம்பி வெண்கலம் வென்றார். இது, உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஹம்பி வென்ற 5வது பதக்கம். ஏற்கனவே 2 தங்கம் (2019, 2024), ஒரு வெள்ளி (2023), ஒரு வெண்கலம் (2012) வென்றிருந்தார். இதன்மூலம் இத்தொடரில் 5 பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (10.5) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (9.5) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

