/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கபடி உலக கோப்பையில்
/
பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கபடி உலக கோப்பையில்
பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கபடி உலக கோப்பையில்
பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கபடி உலக கோப்பையில்
ADDED : நவ 23, 2025 11:10 PM

தாகா: கபடி உலக கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. அரையிறுதியில் 33-21 என, ஈரானை வென்றது.
வங்கதேச தலைநகர் தாகாவில், பெண்களுக்கான கபடி உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம், போலந்து உள்ளிட்ட 10 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, லீக் சுற்றில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை வீழ்த்தியது.
அரையிறுதியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 33-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2012, 2025) பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம், சீனதைபே அணிகள் மோதின. இதில் சீனதைபே அணி 25-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பைனலில் (நவ. 24) இந்தியா, சீனதைபே அணிகள் மோதுகின்றன.

