தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குவைத்தை வென்றது இந்தியா: ஆசிய ஸ்குவாஷ் தொடரில்

குவைத்தை வென்றது இந்தியா: ஆசிய ஸ்குவாஷ் தொடரில்

குவைத்தை வென்றது இந்தியா: ஆசிய ஸ்குவாஷ் தொடரில்


ADDED : ஜூன் 12, 2024 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2024 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேலியன்: ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.

சீனாவில், அணிகளுக்கு இடையிலான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, குவைத் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் வேலவன் செந்தில்குமார், சுராஜ் குமார் சந்த் வெற்றி பெற்றனர். மற்றொரு இந்திய வீரர் ராகுல் பதியா தோல்வியடைந்தார்.

இரண்டாவது போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது.

பெண்களுக்கான 'ஏ' பிரிவு முதல் லீக் போட்டியில் இந்தியா, மக்காவு அணிகள் மோதின. ராதிகா சுதந்திர சீலன், ஜனெத் விதி கைகொடுக்க இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. இந்தியாவின் பூஜா ஆர்த்தி ரகு மட்டும் தோல்வியடைந்தார்.

இரண்டாவது போட்டியில் இந்தியா, மங்கோலியா அணிகள் மோதின. இதில் ராதிகா, பூஜா, சுனிதா படேல் கைகொடுக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us