sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்

/

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்


UPDATED : செப் 14, 2024 10:38 PM

ADDED : செப் 14, 2024 03:42 PM

Google News

UPDATED : செப் 14, 2024 10:38 PM ADDED : செப் 14, 2024 03:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-1 என பாகிஸ்தானை வீழ்த்தியது.

சீனாவின் ஹுலுன்பியுரில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 8வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு போட்டியில் சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. இரண்டு வெற்றி, இரண்டு 'டிரா'வை பதிவு செய்த பாகிஸ்தான் அணியும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

கடைசி லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பாகிஸ்தானின் அகமது நதீம் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு 13, 19வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை (15 புள்ளி) கைப்பற்றியது. பாகிஸ்தான் (8 புள்ளி) 2வது இடம் பிடித்தது.

சீனா தகுதி

மற்றொரு லீக் போட்டியில் மலேசியா, தென் கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 3-3 என 'டிரா' ஆனது. ஐந்து போட்டியில், ஒரு வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் தென் கொரிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கடைசி லீக் போட்டியில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் சீன அணி 2-0 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டியில், 2 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த சீனா அரையிறுதிக்கு முன்னேறியது.

தென் கொரியாவுடன் மோதல்

அரையிறுதியில் (செப். 16) பாகிஸ்தான் - சீனா (மதியம் 1:00 மணி), இந்தியா - தென் கொரியா (மதியம் 3:30 மணி) அணிகள் மோதுகின்றன.

பதட்டமான தருணம்

இந்தியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. கடைசி 10 நிமிடம் மீதமிருந்த போது இந்தியாவின் கோல் எல்லை பகுதிக்குள், பாகிஸ்தானின் அஷ்ரப் வாஹீத் ராணா, இந்தியாவின் ஜக்ராஜ் சிங் மோதிக் கொண்டனர். இதில் ஜக்ராஜ் சிங் கீழே விழுந்ததில் லேசாக காயம் அடைந்தார். அப்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், பாகிஸ்தான் வீரர் ராணாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இச்சம்பவம் குறித்து 'டிவி' அம்பயரிடம் 'ரிவியூ' கேட்கப்பட்டது. இதில் ராணாவின் தவறு உறுதியானதால், 'மஞ்சள் அட்டை' காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணி கடைசி 10 நிமிடம், 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடரும் ஆதிக்கம்

கடந்த 2016ல் அசாமின் கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டின் லீக் சுற்று, பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதன்பின் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை (2016), ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (2016, 2018, 2021, 2023, 2024), ஹாக்கி வேர்ல்டு லீக் (2016-17), ஆசிய கோப்பை (2017), சாம்பியன்ஸ் டிராபி (2018), ஆசிய விளையாட்டு (2018, 2022) போன்ற மிகப் பெரிய தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததில்லை. இதில் மோதிய 17 போட்டிகளில் இந்தியா 15ல் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் (காமன்வெல்த் விளையாட்டு-2018, ஆசிய கோப்பை-2022) மட்டும் 'டிரா' ஆனது. கடைசியாக 2022ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணி 10-2 என பாகிஸ்தானை வென்றது.






      Dinamalar
      Follow us