/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
/
பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
ADDED : அக் 20, 2024 09:29 PM

ஜோகர்: ஜோகர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 6-4 என பிரிட்டன் அணியை வீழ்த்தியது.
மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் பிரிட்டனின் ரோரி பென்ரோஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 7வது நிமிடத்தில் இந்தியாவின் முகமது கோனைன் டாட் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய பென்ரோஸ், 15வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்தார். இதற்கு இந்தியாவின் தில்ராஜ் (17வது நிமிடம்), ஷர்தானந்த் திவாரி (20வது), மன்மீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் இந்திய அணி 4-2 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 56வது நிமிடத்தில் பிரிட்டனின் மைக்கேல் ராய்டென் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 50வது நிமிடத்தில் இந்தியாவின் தில்ராஜ், ஷர்தானந்த், அடுத்தடுத்து கோல் அடித்து பதிலடி தந்தனர். பிரிட்டன் அணிக்கு 59வது நிமிடத்தில் ராய்டென், மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6-4 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே முதல் போட்டியில் ஜப்பானை வென்றது.