
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராகு: பிராகு செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
செக் குடியரசில் 'பிராகு' சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி பங்கேற்கின்றனர்.
இதன் இரண்டாவது சுற்றில் குகேஷ், செக் குடியரசின் வான் நிகுவேனை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், போட்டியின் 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, ஈரானின் பர்ஹாமை எதிர்கொண்டார்.
இதில் கடைசி நேர நெருக்கடியில் சொதப்பிய பிரக்ஞானந்தா, போட்டியின் 38 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இரண்டு சுற்று முடிவில் பர்ஹாம் (2.0) முதலிடத்தில் உள்ளார். குகேஷ் (1.5) இரண்டாவதாக உள்ளார். விதித் குஜ்ராத்தி (1.0) 4வது, பிரக்ஞானந்தா (1.0) 7வது இடங்களில் உள்ளனர்.

