/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை பைனலில் இந்தியா: உலக பல்கலை., விளையாட்டில்
/
வில்வித்தை பைனலில் இந்தியா: உலக பல்கலை., விளையாட்டில்
வில்வித்தை பைனலில் இந்தியா: உலக பல்கலை., விளையாட்டில்
வில்வித்தை பைனலில் இந்தியா: உலக பல்கலை., விளையாட்டில்
ADDED : ஜூலை 24, 2025 11:27 PM

ரினே---ருஹ்ர்: உலக பல்கலை., விளையாட்டு வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு பைனலுக்கு இந்திய ஆண்கள் அணி முன்னேறியது.
ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு காலிறுதியில் இந்திய அணி 236-229 என அமெரிக்காவை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், ஹிருத்திக் சர்மா அடங்கிய இந்திய அணி 235-233 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
நாளை நடக்கவுள்ள ஆண்களுக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மோதுகின்றனர். இதனையடுத்து 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது.
பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு காலிறுதியில் பர்னெத் கவுர், அவ்னீத் கவுர், மதுரை அடங்கிய இந்திய அணி 232-226 என இத்தாலியை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி 230-233 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இனி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனை சந்திக்கவுள்ளது.
தடகளம்: ஆண்கள், பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் கிரண் மாத்ரே (14 நிமிடம், 41.49 வினாடி), சீமா (15 நிமிடம், 30.70 வினாடி) பைனலுக்கு முன்னேறினர்.
* ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், 71.60 மீ., எறிந்த இந்தியாவின் சாஹில் சில்வால், பைனலுக்கு தகுதி பெற்றார்.
* கலப்பு அணிகளுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய ஜெரோமி சஞ்சய், ரூபால், விஷால், தேவ்யானிபா அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 19.21 வினாடி) பைனலுக்குள் நுழைந்தது.