தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியா-நியூசி., பலப்பரீட்சை * வெளியானது ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை

இந்தியா-நியூசி., பலப்பரீட்சை * வெளியானது ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை

இந்தியா-நியூசி., பலப்பரீட்சை * வெளியானது ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை


ADDED : மார் 06, 2024 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாசேன்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்ற ஹாக்கி போட்டி முதன் முறையாக 1908ல் லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகம் ஆனது.

தற்போது 25வது முறையாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ளது. இம்முறை 12 ஆண்கள், 12 பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன. நேற்று போட்டி அட்டவணை வெளியானது.

இந்திய ஆண்கள் அணி இம்முறை 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து அணிகள் உள்ளன. 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், தென் ஆப்ரிக்க அணிகள் உள்ளன.

ஜூலை 27-ஆக. 2 வரை லீக் போட்டி நடக்கவுள்ளன. ஆக. 4ல் காலிறுதி, ஆக. 6ல் அரையிறுதி, 8ல் பைனல் நடக்கும்.

இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்தலாக செயல்பட்டது. 41 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. இம்முறை மீண்டும் சாதிக்க திட்டமிட்டுள்ளது. தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை (ஜூலை 27) சந்திக்க உள்ளது. அடுத்து அர்ஜென்டினா (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 30), பெல்ஜியம் (ஆக. 1) கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் (ஆக. 2) மோத உள்ளது.

பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி இம்முறை தகுதி பெறவில்லை.

அட்டவணை

இந்திய அணி மோதும் லீக் சுற்று அட்டவணை:

தேதி எதிரணி நேரம்

ஜூலை 27 நியூசிலாந்து இரவு 9:00 மணி

ஜூலை 29 அர்ஜென்டினா மாலை 4:15 மணி

ஜூலை 30 அயர்லாந்து மாலை 4:45 மணி

ஆக. 1 பெல்ஜியம் நள்ளிரவு 1:30 மணி

ஆக. 2 ஆஸ்திரேலியா மாலை 4:45 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us