ADDED : ஏப் 16, 2026 10:39 PM

டர்பன்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி (ஏப். 17) டர்பனில் நடக்கிறது.
* சென்னையில் இன்று நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, இதுவரை விளையாடிய 7 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', 4 தோல்வியை பதிவு செய்தது.
* ஜெர்மனியில் நடக்கும் பி.எம்.டபிள்யு., ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-4, 6-1 என, இத்தாலியின் லுாசியானோ, மெக்சிகோவின் கான்சலஸ் ஜோடியை வென்றது.
* தென் கொரியாவில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகேரு யுசுகி ஜோடி 6-2, 7-5 என, பிரிட்டனின் பென் ஜோன்ஸ், ஜோஷுவா பாரிஸ் ஜோடியை வீழ்த்தியது.
* சவுதி அரேபியாவில், ஆசிய கோப்பை (17 வயது, மே 5-22) கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக தாய்லாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி, 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் (ஏப். 17, 21, இடம்: பாங்காக்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
* மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,), வீரர்கள் ஒப்பந்த பட்டியலை (2026-27) முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதன் படி 'கிரேடு-ஏ' பிரிவு வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 12-20 லட்சம், 'கிரேடு-பி' பிரிவினருக்கு ரூ. 8-12 லட்சம், 'கிரேடு-சி' பிரிவினருக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்படும்.
