/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 14 பதக்கம்: ஜூனியர் ஆசிய குத்துச்சண்டையில்
/
இந்தியாவுக்கு 14 பதக்கம்: ஜூனியர் ஆசிய குத்துச்சண்டையில்
இந்தியாவுக்கு 14 பதக்கம்: ஜூனியர் ஆசிய குத்துச்சண்டையில்
இந்தியாவுக்கு 14 பதக்கம்: ஜூனியர் ஆசிய குத்துச்சண்டையில்
ADDED : ஆக 10, 2025 10:08 PM

பாங்காக்: ஜூனியர் ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 14 பதக்கம் கிடைத்தது.
தாய்லாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் நிஷா 4-1 என்ற கணக்கில் சீனாவின் சிருய் யாங்கை வீழ்த்தி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் முஸ்கான் 3-2 என கஜகஸ்தானின் அயாசான் எர்மெக்கை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் ஆர்த்தி குமாரி (75 கி.கி.,), கிருத்திகா வாசன் (80 கி.கி.,), பார்ச்சி தோகாஸ் (80+ கி.கி.,), வினி (60 கி.கி.,), நிஷா (65 கி.கி.,) வெள்ளி வென்றனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் ராகுல் குண்டு 4-1 என, உஸ்பெகிஸ்தானின் முகமதுஜோன் யாகுப்போவெக்கை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்தது.
இந்திய நட்சத்திரங்கள், ஒட்டுமொத்தமாக 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கம் வென்றனர்.