/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக வீரர் யுகன் சாதனை * ஆசிய துப்பாக்கி சுடுதலில்...
/
தமிழக வீரர் யுகன் சாதனை * ஆசிய துப்பாக்கி சுடுதலில்...
தமிழக வீரர் யுகன் சாதனை * ஆசிய துப்பாக்கி சுடுதலில்...
தமிழக வீரர் யுகன் சாதனை * ஆசிய துப்பாக்கி சுடுதலில்...
UPDATED : ஆக 30, 2025 08:20 PM
ADDED : ஆக 29, 2025 10:31 PM

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் தமிழக வீரர் யுகன், 3 தங்கம் வென்று சாதனை படைத்தார்.
கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடந்தது. இதன் 'யூத் டிராப்' பிரிவில் இந்திய வீரர் யுகன் 14, பங்கேற்றார். தனிநபர் பிரிவில் 116 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆண்கள் அணிகள் பிரிவில் யுகன் (116 புள்ளி), அஹ்யான் சையத் அலி (102), மானவ்ராஜ் (90) அடங்கிய இந்திய அணி 308 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கலப்பு அணிகள் பிரிவில் யுகன் (63), தனிஸ்கா (58) ஜோடி, 121 புள்ளிகளுடன் தங்கம் கைப்பற்றியது. இதன் மூலம் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் கோவையை சேர்ந்த யுகன்.
யுகன் கூறுகையில், ''எனது வெற்றிக்கு இடைவிடாத பயிற்சி, பயிற்சியாளர்களின் ஆதரவு முக்கிய காரணம். இந்தியாவுக்காக வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது,'' என்றார்.

